டத்தோ டி. மோகன் அவர்களின் தீபாவளி வாழ்த்து

டத்தோ டி. மோகன் அவர்களின் தீபாவளி வாழ்த்து

கோலாலம்பூர், அக்டோபர் 20 –

ஒளியின் திருநாளான தீபாவளி, நன்மை தீமையை வெல்வதையும், இருளை அகற்றி நம்பிக்கையைக் கொண்டுவருவதையும் குறிக்கும் புனித நாளாகும்இந்த அர்த்தமிக்க திருநாளை முன்னிட்டு, அனைத்து மலேசிய சகோதர, சகோதரிகளுக்கும் என் இதயம் கனிந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!தீபாவளி நம்மை ஒருமைப்பாட்டின், அன்பின், அமைதியின் வழியில் இட்டுச் செல்கிறது. நம் உள்ளங்களில் ஒளி ஏற்றி, சமூக ஒற்றுமையையும் மனிதநேயத்தையும் வளர்க்கும் அழைப்பாகும்.

மலேசிய இந்திய காங்கிரஸ் (MIC) எப்போதும் இந்திய சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. தீபாவளியின் ஒளி போலவே, நம் முயற்சிகளும் நம் சமூகத்தின் ஒவ்வொரு மூலையிலும் நம்பிக்கை, முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளை பரப்பட்டும்.

இந்த தீபாவளி நம்மை புதிய உற்சாகத்துடன், புதுமையான சிந்தனைகளுடன், ஒற்றுமையையும் முன்னேற்றத்தையும் நோக்கி நகரச்செய்யட்டும்.நமது குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க, இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சியில் பங்கெடுக்க, குடும்பங்கள் மகிழ்ச்சி மற்றும் வளம் நிரம்ப வாழ நல் ஆசிகள்.ஒளியின் வெற்றி நம் மனங்களிலும், சமூகத்திலும், நாட்டிலும் எப்போதும் பிரகாசிக்கட்டும்.

.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! 
– டத்தோ டி. மோகன்
மலேசிய இந்தியர் காங்கிரஸ் பூச்சோங் தலைவர் (ம.இ.கா.)

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *