“பிளெஸ்மேன் 2” – நம்பிக்கை, நீதி, மாற்றத்தின் கதை நாளை வெளியீடு!

பப்புவா நியூ கினியா 16 அக்டோபர் 2025
பெரும் எதிர்பார்ப்புக்கிடையில் “Jona Film Production” நிறுவனத்தின் புதிய திரைப்படம் “Plesman 2” நாளை, அக்டோபர் 17, 2025, பப்புவா நியூ கினியாவில் பிரீமியர்கா ட்சியுடன் வெளியாகிறது.
“Rising from the Ashes” என்ற துணைத் தலைப்பில் உருவான இந்த திரைப்படம் நம்பிக்கை, நீதி மற்றும் சமூக மாற்றத்தின் அர்த்தமிக்க பயணத்தை எடுத்துக்கூறுகிறது.
திரைக்கதை எழுதி இயக்கியவர்: ராமா, இணை இயக்குனர்: மகாராஜன் மனோகர் , தயாரிப்பாளர்: வோசி காயோ, நிர்வாக தயாரிப்பாளர்கள்: எஸ்.பி. வில்லியம் வாஙாரே, டி.ஜே. அகுவா டோப், நவீந்தன் பெருமாள், எஸ்.ஸ்ரீ தாரன்
முக்கிய கதாபாத்திரங்களில்: துலிமான், மார்ஜொரி, வில்லியம் அவினுப் பெருயுங் (படா ராட் PNG) , பாபி மேக்ஸ் கைர் பி நெம், எஸ்.பி. வில்லியம் வாஙாரே, எங்கா ரே & டெசிஸ்.
தொழில்நுட்பக் குழுவில்: உதவி எடிட்டர்: யுவன் ராஜ் செல்வம், கேமரா: கென்னி மாசிபோடா (DOF), பிலெமன் டொன்னி, காம்போர்ன் ஹுயெம்பி, சனெல்லா லாய், பெவாஞ்சலின் டாவ்னோ, காமே & மேக்: கோனியோ-கொய்டா மோரியா, சோஅர்ட் ரேமண்ட், மார்க் ஒன்டான்ட், ஹில்லா யன்ஜோல் பிலிப், தயாரிப்பு உதவியாளர்: சாலாட்டியல் எரொன் வெக்ஸ் & காட்சி விளைவுகள் (VFX): மாய்லா FX VFX (பப்புவா நியூ கினி), மாசி மாசிபோடா (VFX ஹாஸ்)
இந்த திரைப்படம் பப்புவா நியூ கினியின் பல திறமையான கலைஞர்களையும், மலேசியாவின் படைப்பாற்றலையும் ஒரே மேடையில் இணைக்கிறது. “Plesman 2” சமூக உணர்வை தூண்டும் வகையில் உருவாகி, நம்பிக்கையின் தீபத்தை மீண்டும் பற்றவைக்கும் ஒரு படைப்பாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
சிறப்பு திரைப்படம் காட்சி: மலேசியாவில் , அக்டோபர் 26, 2025
“Plesman 2” – நம்பிக்கையிலிருந்து எழும் மனித மனத்தின் வெற்றி!















