நம்பிக்கை இண்டர்நேஷனல் பிசினஸ் ஐகான் அவார்ட்ஸின் வரவிருக்கும் விருது

 

கோலாலம்பூர் 16 அக்டோபர் 2025

நம்பிக்கை இண்டர்நேஷனல் பிசினஸ் ஐகான் அவார்ட்ஸின் வரவிருக்கும் விருது விழாவை அறிமுகப்படுத்தும் நோக்கில் இன்று மதியம் 2 மணிக்கு கோலாலம்பூரில் ஒரு செய்தியாளர் சந்திப்பு நடைபெறுகிறது.

இந்த விருதுகள் தொழில், தொழில்முனைவோர் வளர்ச்சி மற்றும் சமூகத் தலைமைத்துவத்தில் சிறந்து விளங்கும் நபர்களையும் நிறுவனங்களையும் பாராட்டும் நோக்கில் வழங்கப்பட உள்ளன. “நம்பிக்கை” என்ற சொல், நம்பிக்கை, ஊக்கமளித்தல் மற்றும் ஈடுபாடு ஆகிய மதிப்பீடுகளை பிரதிபலிக்கிறது.

விருதுகளில் Entrepreneur of the Year, Women in Business Excellence, Rising Icon, Lifetime Achievement போன்ற பிரிவுகள் உள்ளன, மேலும் மலேசியாவும் பிற நாடுகளையும் சேர்ந்த பிரபலங்களும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விழாவில் பிரபலங்கள், தொழில்துறை தலைவர்கள், சமூக மாற்றத்திற்க்காக பணியாற்றும் நபர்கள் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டு ஒன்றிணையும் ஒரு முக்கிய மேடையாக அமையும்.

முழுமையான நிகழ்ச்சி விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். @ # NOM Ammuchi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *