சென்னை, அக்டோபர் 15, 2025

தேசிய விருது பெற்ற நடிகர் எம்.எஸ். பாஸ்கர் – கலைஞானி கமல்ஹாசனிடம் வாழ்த்து பெற்ற பெருமைமிகு தருணம்!
சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற திறமையாளர் எம்.எஸ். பாஸ்கர், தனது அந்த உயரிய விருதை பெற்று மகிழ்ந்த பிறகு, இந்திய திரையுலகின் உயிர் கலைஞானி உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
அந்த சந்திப்பில் கமல்ஹாசன் அவர்கள் பாஸ்கரின் சாதனையைப் பாராட்டி, “உண்மையான நடிகர் உணர்ச்சிகளை நம்பகமாக வெளிப்படுத்துபவர்தான்; பாஸ்கர் அதைத் தன் வாழ்க்கையிலும் கலைத்திலும் நிரூபித்துள்ளார்” எனக் கூறினார்.
பாஸ்கர் அவர்கள் நெகிழ்ச்சியுடன், “உலக நாயகன் கமல்ஹாசனின் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்தது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்” எனப் பகிர்ந்துள்ளார்.
இந்த இரு கலை ஆளுமைகளின் சந்திப்பு புகைப்படம் தற்போது சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ரசிகர்கள் இதனை “கலைக்கும் கலைஞனுக்கும் இடையிலான உண்மையான மரியாதை” எனப் பாராட்டுகின்றனர்.
நான் ஒரு மலேசியன் — உலகத் தமிழரின் சாதனையை பெருமையாகப் பாராட்டுகிறேன்!
இத்தகைய கலைஞர்கள் நம் உலகத் தமிழரின் பெருமை, ஊக்கமும் நம்பிக்கையும் ஆவர்.















