பினாங் புதன்கிழமை, 15 அக்டோபர் 2025

கலைமாமணி எம்.ஜி.ஆர் தேவன் மற்றும் சிங்கப்பூர் தொழில் அதிபர் திரு. வேலு ஆகியோர் இணைந்து பினாங்கில் உள்ள ‘உள்ளா குழந்தைகள் இல்லம்’ (Ulla Children Home) குழந்தைகளுக்கு தீபாவளி பரிசுகள் வழங்கினர்

வரவிருக்கும் தீபாவளி திருநாளை முன்னிட்டு, பெனாங்கில் உள்ள Ulla Children Home என்ற குழந்தைகள் இல்லத்தில் மகிழ்ச்சியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மலேசியாவின் சிறந்த கலைஞரும் சமூகப் பணியாளருமான கலைமாமணி எம்.ஜி.ஆர் தேவன், மற்றும் சிங்கப்பூரின் புகழ்பெற்ற தொழில் அதிபர் திரு. வேலு ஆகியோர் இணைந்து கலந்து கொண்டு, இல்லத்தில் வசிக்கும் சிறார்களுக்கு தீபாவளி பலகாரங்கள், இனிப்புகள் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கினர்.
இந்த மனிதநேயச் செயலால் குழந்தைகள் மகிழ்ச்சியில் திளைத்தனர். நிகழ்வின் போது தேவன் அவர்கள்,
“தீபாவளி என்பது ஒளியின் திருவிழாவாக மட்டுமல்லாது, அன்பும் பாசமும் பகிரும் ஒரு சிறப்பு நாளாகும். இந்தச் சிறார்களின் முகத்தில் சிரிப்பை காண்பதே உண்மையான திருநாள் ஆனந்தம்,”என்று தெரிவித்தார். திரு. வேலு அவர்கள்,

“சிங்கப்பூரிலிருந்தாலும், எங்கள் இதயம் எப்போதும் நமது சமுதாயத்தோடு இணைந்ததே. ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சிரிப்பு அளிக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்,”என்று கூறினார்.நிகழ்வில் இல்ல நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரதிநிதிகளும் கலந்து கொண்டு, இந்நிகழ்வை சிறப்பித்தனர். இந்த மனிதநேய முயற்சி, தீபாவளி ஒளியை சிறார்களின் இதயங்களிலும் பிரகாசிக்கச் செய்தது.















