“Last Bencher” – திவன் ஸ்ரீதரனின் கனவு நனவான தருணம்.

“Last Bencher” – திவன் ஸ்ரீதரனின் கனவு நனவான தருணம்.

கிலாங், அக். 13, 2025

கிலாஙில் பிறந்த திவன் ஸ்ரீதரன் (@thivansreetharan), இன்று தனது வாழ்க்கையின் மறக்க முடியாத ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியுள்ளார்.
அவரது முதல் தமிழ் இன்டி பாடலான “Last Bencher” இன்று இந்தியாவின் Saregama Tamil YouTube Channel-ல் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது! 🎬✨

இந்த சிறப்பான வெளியீட்டை முன்னிட்டு, MBO Quayside Mall-ல் Special Screening & Press Conference நிகழ்வும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுமார் 150 பேருக்கும் மேற்பட்டோர் — குடும்பத்தினர், நண்பர்கள், மலேசிய திரைப்பட துறை பிரபலங்கள் மற்றும் ஊடக நண்பர்கள் — கலந்து கொண்டு திவனுக்கு உற்சாக ஆதரவை தெரிவித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக Dato G. Geethanjali கலந்து கொண்டு, திவனின் சாதனையைப் பாராட்டினார்.
அவரது உற்சாகமான வரவேற்பு திவனின் இசை பயணத்திற்கு ஒரு புதிய ஊக்கத்தை அளித்தது.

🎶 “Last Bencher” பாடலின் வரிகள், இசை, குரல் அனைத்தும் திவனுடையது.
இசையமைப்பில் Shane Extreme, கிதாரில் Joseph Vijay, இசை கலப்பில் A.R. Rahman குழுவின் Suresh Permal, நிற ஒப்பனையில் Kowshik KS, VFX-இல் Aadit Maran, இயக்கத்தில் Govind Singh, முன்னணி கதாபாத்திரத்தில் Chandhine Kaur ஆகியோர் இணைந்துள்ளனர்.

இந்த பாடல் மலேசிய தமிழ் இசை வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவின் Saregama Tamil நிறுவனம் வெளியிடும் மலேசிய தமிழ் இன்டி பாடல் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

“நான் ஒரு மலேசியன் — பெருமிதம் கொள்ளும் ஒரு புதிய மைல் கல்!”
– திவன் ஸ்ரீதரன்

இசை மீதான ஆர்வமும், கனவு மீது கொண்ட நம்பிக்கையும் இணைந்தால் உலகம் தன்னாலேயே கதவைத் திறக்கும் என்பதற்கான உண்மையான சான்று — திவன் ஸ்ரீதரன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *