டத்தோ’ டாக்டர் விநோட் @ நாகராஜு அவர்களின் தலைமையில் 36-ஆவது அஞ்சலித் திருவிழா கடந்த திங்கட்கிழமை (6.10.2025) நடைபெற்றது.


கோலாலம்பூர், அக். 9, 2025

டத்தோ’ டாக்டர் விநோட் @ நாகராஜு அவர்களின் தலைமையில் 36-ஆவது அஞ்சலித் திருவிழா கடந்த திங்கட்கிழமை (6.10.2025) நடைபெற்றது.

இந்த நிகழ்வு, மறைந்த திருமதி நிர்மலா தேவி சுப்பிரமணியம் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இவர் 30 பிப்ரவரி 1976 அன்று பிறந்தவர்; 49 வயதில் மறைந்தார்.

மிகுந்த துயரத்துடன் நடத்தப்பட்ட இந்நிகழ்வில், “பெற்றோர்களை துறக்காமல் அவர்களின் இறுதி வரை கவனித்து கொள்வது ஒவ்வொரு மகனும் மகளும் கடமை” என டத்தோ’ டாக்டர் விநோட் அவர்கள் வலியுறுத்தினார். மேலும்,

“இந்த உலகில் நம்மை உருவாக்கியவர்கள் பெற்றோர்கள். அவர்களை புறக்கணிக்காமல் அன்புடன் பராமரிக்க வேண்டும். அன்பை பகிர்வதே மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அர்த்தம். அனைவருடனும் அன்பு பகிர்ந்து சேவை செய்யும் மனப்பாங்கு வேண்டும்,”

என்று அவர் உரையாற்றினார்.

இந்த நிகழ்வு சமூக அன்பு, கருணை, மற்றும் ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் நடைபெற்றது.

செய்தி: வீர சின்னையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *