2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவு: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரிடம் பிரதமர் சமர்ப்பித்தார்

2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவு: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டாரிடம் பிரதமர் சமர்ப்பித்தார்.

கோலாலம்பூர்:அக்டோபர் 9, 2025
மலேசியாவின் 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (அக்டோபர் 9, 2025) பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரதமரும் நிதி அமைச்சருமான டத்தோ செரி அன்வார் இப்ராஹிம் அவர்கள், கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா Bukit Tunku இல் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் அவர்களிடம் இந்த ஆவணத்தைச் சமர்ப்பித்தார் என சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் அவர்களின் ஃபேஸ்புக் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு புத்ராஜெயாவில் ஊடக ஆசிரியர்களுக்கு அளித்த விளக்கத்தில், அன்வார் இப்ராஹிம் அவர்கள், இது நான்காவது MADANI அரசாங்கத்தின் பட்ஜெட் என்றும், இது மக்களைப் பாதுகாத்தல், பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், மற்றும் நிலையான, அனைவரையும் உள்ளடக்கிய தேசத்தின் அடித்தளங்களை உறுதிப்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் கூறினார்.

பாராளுமன்ற இணையதளத்தில் உள்ள அட்டவணையின்படி, பிரதமர் நாளை (அக்டோபர் 10, 2025) மாலை 4 மணிக்கு மக்களவையில் (Dewan Rakyat) 2026 ஆம் ஆண்டுக்கான வழங்கல் மசோதாவை (Supply Bill – Budget) சமர்ப்பிக்க உள்ளார்.

இந்த மசோதா எட்டு நாட்களுக்கு பொது விவாதத்திற்கு உட்படுத்தப்படும். அதைத் தொடர்ந்து அக்டோபர் 29 முதல் நவம்பர் 4 வரை அமைச்சகங்களால் பதில் வழங்கப்படும். பின்னர், நவம்பர் 5 முதல் நவம்பர் 27 வரை குழு நிலையில் விவாதம் செய்யப்பட்டு மக்களவையில் அங்கீகரிக்கப்படும்.

செய்தி: வீர சின்னையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *