09 அக்டோபர் 2025
நம்ம வீட்டு தீபாவளி” — புதிய சிற்ற்திரைப்படம் விரைவில்!

சாய் மாகேஷ் இயக்கத்தில், SAI FILM PRODUCTION @ YTSS SHELLOUT நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள “நம்ம வீட்டு தீபாவளி” சிற்ற்திரைப்படம், குடும்ப உணர்வுகளும் பண்டிகை மகிழ்ச்சியும் கலந்த ஒரு சிறப்பான காட்சிப்பாடலாக உருவாகியுள்ளது.

இந்த படத்தின் இயக்குநராக சாய் மாகேஷ், உதவி இயக்குநராக யாசோதரன், ஒளிப்பதிவாளராக ஜீவஹ் சந்திரன் பணியாற்றியுள்ளனர்.

இசை உலகில் தனித்துவமான குரலால் பிரபலமான டாக்டர் அஜஹர் மற்றும் பால்கிஸ் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை டாக்டர் அஜஹர் மற்றும் மணிராமு எழுதியுள்ளனர். இசையமைப்பும் இசை வடிவமைப்பும் திறமையான மேதோவன் அவர்களால் செய்யப்பட்டுள்ளன.
பாடல் பதிவு இன்னிசை மலர் ஸ்டூடியோவில் சிறப்பாக நடைபெற்றது.
இது குடும்ப பாசம், ஒன்றுபட்ட மகிழ்ச்சி, மற்றும் பாரம்பரியத்தின் மணம் மிக்க ஒரு தீபாவளி சிறப்பு இசை-வீடியோவாக ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் உங்கள் முன் — “நம்ம வீட்டு தீபாவளி”















