ராயல் என்ஃபீல்டு கேடா கிங்ஸ் மற்றும் கடாரம் பைக்கர்ஸ் இணைந்து — “அன்னம் பஹ்ரமம்” உணவுப் பெட்டி நன்கொடைத்திட்டம்
சுங்கை பெத்தானி, கேடா — 09 அக்டோபர் 2025:

ராயல் என்ஃபீல்டு கேடா கிங்ஸ் மற்றும் கடாரம் பைக்கர்ஸ் குழுக்கள் இணைந்து “ப்ராஜெக்ட் அன்னம் பஹ்ரமம் – உணவுப் பெட்டி நன்கொடைத்திட்டம்” என்ற சமூக நலத் திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளன.
இந்த நிகழ்ச்சி வரும் அக்டோபர் 11, 2025 (சனிக்கிழமை) அன்று மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, லெஜண்ட் ஹால், சுங்கை பெத்தானி, கேடாவில் நடைபெறும்.
இத்திட்டத்தின் மூலம் பி40 (B40) வர்க்கத்தைச் சேர்ந்த 50 குடும்பங்களுக்கு தீபாவளி திருநாளை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளன. சமூகத்தில் ஒற்றுமை, பகிர்வு மற்றும் அன்பை வளர்ப்பதற்காக இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ராயல் என்ஃபீல்டு கேடா கிங்ஸ் குழுவும் கடாரம் பைக்கர்ஸ் உறுப்பினர்களும் இந்த திட்டத்தில் தன்னார்வலர்களாக பங்கேற்று உணவுப் பெட்டிகளைத் தொகுத்து வழங்கவுள்ளனர்.
நிகழ்ச்சித் தேதி: 11 அக்டோபர் 2025 (சனிக்கிழமை)
நேரம்: மாலை 6.00 மணி – 9.00 மணி
இடம்: லெஜண்ட் ஹால், சுங்கை பெத்தானி, கேடா















