மலேசிய இந்திய கலைஞர்கள் நலச்சங்கம் (Malaysian Indian Entertainers Welfare Association) பெற்றோர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.

கோலாலம்பூர், அக்.7.2025

மலேசிய இந்திய கலைஞர்கள் நலச்சங்கம் (Malaysian Indian Entertainers Welfare Association) பெற்றோர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடும் வகையில் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தது.

இந்நிகழ்வில் பல்வேறு துறைகளில் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டதுடன், குடும்பத்திற்காக தன்னலமற்ற சேவையும் அன்பையும் வழங்கி வந்த இரண்டு சிறந்த பெற்றோர்களும் சங்கத்தின் சார்பில் கௌரவிக்கப்பட்டனர். பெற்றோர்கள் தான் குடும்பத்தின் உண்மையான பல தூண்கள் என்ற செய்தியை வலியுறுத்தும் வகையில் இவ்விழா அனைவரின் மனதையும் நெகிழச்செய்தது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர், “பெற்றோர்களை கௌரவித்து, குடும்ப மதிப்புகளை பேணும் நோக்கில் இப்படிப்பட்ட விழாவை நடத்தியமை பாராட்டத்தக்கது” என தெரிவித்தார்.

சங்கத் தலைவர் மற்றும் ஏற்பாட்டு குழுத் தலைவர் திரு. சுகன் பஞ்சாட்சரன், பெற்றோர்களின் பங்களிப்பை மதிக்கும் வகையில் இத்தகைய விழாக்கள் தொடர்ச்சியாக நடைபெறும் எனக் கூறி, சமூகத்தில் குடும்ப பிணைப்பை வலுப்படுத்துவது தான் சங்கத்தின் நோக்கமாகும் என வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *