BUDI மடானி 95 திட்டம் மூன்று குழுக்களுக்கு விரிவுப்படுத்தப்பட்டுள்ளது: மலேசிய நிதியமைச்சு தகவல்
கோலாலம்பூர்: 07.10.2025

இலக்கு மானிய திட்டமான BUDI MADANI RON95 (BUDI95) திட்டத்தின் தகுதியை மேலும் மூன்று குழுக்குகளுக்கு விரிவுபடுத்தியுள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. இந்நடவடிக்கை இந்த திட்டத்தில் 31,000க்கும் மேற்பட்ட மக்களை சேர்த்துள்ளது.
இந்த தகுதி விரிவாக்கம் மலேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தில் பதிவு செய்யப்பட்ட 17,900க்கும் மேற்பட்ட மீனவர்கள், சபா துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை ஆணையத்தில் பதிவு பெற்ற 4,300க்கும் மேற்பட்ட தனியார் படகு உரிமையாளர்கள் மற்றும் சாலை போக்குவரத்து துறையால் பதிonவு செய்யப்பட்ட 9,700 புதிய ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களை உள்ளடக்கியதாகக் நிதி அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த குழுக்களை சேர்ந்தவர்கள் மொத்தம் 16 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுடன் இணைந்து மானியமளிக்கப்படும் RON95 எரிபொருளை RM1.99 என்ற விலையில் பெற முடியும்.
மேலும், சபா மற்றும் சரவாக் உள்ளிட்ட பிற மாநிலங்களில் ஓட்டுநர் உரிமம் இல்லாத படகுப் பயனாளர்களைப் பற்றிய கூடுதல் தகவல்களை உறுதிப்படுத்தும் பணி நடந்து கொண்டிருக்கிறது எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இது, மானிய திட்டத்தால் அவர்களின் வாழ்க்கைத் தரம் பாதிக்கப்படாத வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. மடாணி அரசு இந்த திட்டத்தை நேர்மையான, எளிமையான மற்றும் மக்களுக்கு நேரடியாகப் பயன் அளிக்கும் முறையில் செயல்படுத்த உறுதி பூண்டுள்ளது.















