காணாமல் போன 16 வயதுடைய இந்திய இளம் பெண் சாமினி: காஜாங் போலீஸ் தகவல் 

காணாமல் போன 16 வயதுடைய இந்திய இளம் பெண் சாமினி: காஜாங் போலீஸ் தகவல்

காஜாங்: 04.10.2025

காஜாங்கில் ஓர் இளம் பெண் ஒருவர் காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தேடும் நடவடிக்கை தொடர்பாக காஜாங் மாவட்ட காவல்துறை தரப்பு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

 

நேற்று, அக்டோபர் 2தேதி, மாலை நான்கு நாற்பது மணியளவில் ஓர் இளம் பெண் காணாமல் போனதாக காஜாங் போலிஸ் தரப்புக்குத் தகவல் கிடைத்தது.

 

16 வயதுடைய இளம் இந்திய இளைஞரான சாமினி என்பவர் காணாமல் போனதாகவும் அவர் இறுதியாக செக்‌ஷன் 2 பண்டார் ரின்சிங் பகுதியில் காணப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

 

காணாமல் போன இந்த நபர் குறித்த ஏதேனும் தகவல் அறிந்த பொதுமக்கள், அருகில் உள்ள எந்தவொரு பொலிஸ் நிலையத்திலும் சென்று தெரிவிக்கலாம் அல்லது நேரடியாக கஜாங் மாவட்டப் பொலிஸ் தலைமையகத்தைத் தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

பொதுமக்கள் ஒத்துழைக்குமாறு கஜாங் மாவட்டப் போலிஸ் தலைவர் ACP நாஸ்ரோன் பின் அப்துல் யூசோஃப் (ACP Naazron Bin Abdul Yusof) கேட்டுக்கொண்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *