தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், லிட்டில் இந்தியாவில் தற்காலிக கடைகள் இன்னும் அமைக்கப்படாததால் வர்த்தகர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர்.

கோலாலம்பூர், அக் 2 – தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், லிட்டில் இந்தியாவில் தற்காலிக கடைகள் இன்னும் அமைக்கப்படாததால் வர்த்தகர்கள் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கோலாலம்பூர் மாநகர மன்றம் (DBKL) இன்று புதிய ஏற்பாடுகளை அறிவித்தது.

இன்று காலை 11.20 மணிக்கு, டத்தோ பண்டார் அவசர காரணங்களால் வர முடியாததாக தெரிவிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக மாநகர மன்ற சமூக-பொருளாதார இயக்குநர் துவான் இஸ்மாயில் பங்கேற்றார். பின்னர் மதியம் 12.20 மணிக்கு, கூட்டரசு பிரதேச அமைச்சரின் சிறப்பு அதிகாரி சிவமலர் ஜெனபதி செய்தியாளர் சந்திப்பை நடத்தினார்.

அத்துடன் கூட்டரசு பிரதேசத் துறை துணை இயக்குநர் டத்தோ பராங் தாமஸ் அபாஸ், பேங்க் ராக்யாட் நடவடிக்கை தலைவர் நிசாம் சாணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டரசு பிரதேச அமைச்சரும் பேங்க் ராக்யாட்டும் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், நீல நிற 8×8 கூடாரங்களை மாற்றி, வெள்ளை நிற 10×10 கூடாரங்களை அமைக்க பேங்க் ராக்யாட் இணக்கம் தெரிவித்துள்ளது.

அலங்கார விளக்குகள் மாநகர மன்றம் மூலம் உடனடியாக நிறுவப்படும்.

அப்பகுதியில் மாநகர மன்ற கட்டுப்பாட்டு மையம் தொடங்கப்பட்டு, கேள்வி மற்றும் பிரச்சினைகளுக்கு பதிலளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

போக்குவரத்து கட்டுப்பாடு மாநகர மன்ற போக்குவரத்து மற்றும் அமலாக்க பிரிவுகளுடன் இணைந்து முன்னெடுக்கப்படும்.

தற்காலிக கழிப்பிடங்கள் அப்பகுதியில் அமைக்கப்படுகின்றன.

குப்பை அகற்றும் சேவைகள் தினசரி அடிப்படையில் சிறப்பு குழுவால் மேற்கொள்ளப்படும்.

தீயணைப்பு மற்றும் அவசர மருத்துவ உதவிக்காக தற்காலிக ரிலீஃப் குழுக்கள் நியமிக்கப்படுகின்றன.

பாதுகாப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதற்காக மாநகர மன்றத்துடன் காவல்துறையும் இணைந்து செயற்படும்.

விற்பனையாளர்களுக்கு பண்டிகைக் கால சிறப்பு வாகன நிறுத்தப் பாஸ் வழங்கப்படும்.

கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுக்கு தனி மேடை அமைக்கப்படவுள்ளது.

சமூக மற்றும் பொருளாதார நன்மைகள், பண்டிகை காலத்தில் வர்த்தகர்களுக்கு ஏற்படும் சவால்களை சமாளிப்பது, பொதுமக்களுக்கு சௌகரியமான சூழலை ஏற்படுத்துவது ஆகியவற்றுக்காக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டங்கள் குறித்து அதிகாரிகள் உறுதியளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *