ஒற்றுமை வார கொண்டாட்டம் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும்

ஒற்றுமை வார கொண்டாட்டம் ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும்
ஈப்போ செப் 28 .2025


மாநில அளவிலான ஒற்றுமை வார கொண்டாட்டம் பல இனங்களுக்கிடையே ஒற்றுமை உணர்வை வலுப்படுத்தும் என தேசிய ஒருமைப்பாட்டு துறை துணையமைச்சர் செனட்டர் சரஸ்வதி கந்தசாமி கூறினார்.
மலேசிய சமூகத்திடையே பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தில் இந்த கொண்டாட்டம் நல்ல புரிந்துணர்வை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக் காட்டினார்.


இன்று இங்கு பேராக் மாநில அளவிலான ஒற்றுமை வார கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசினார்.
பேராக் மாநிலத்தில் 564 குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இவ்வாண்டிற்கான இந்த கொண்டாட்டம் இந்த குடியிருப்பு பகுதிகளில் ஒற்றுமையின் வலிமையை பிரதிபலிப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.
இம்மாநிலத்தில் 12 மாவட்டங்களில் உள்ள இந்த குடியிருப்பு பகுதிகளில் ஒற்றுமை உணர்வு வலிமை அடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாநில அளவிலான இந்த கொண்டாட்டத்தை பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஷாரானி முகமட் நிறைவு செய்து வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *