நெகிரி செம்பிலன்,பஹாவ்
29.09.2025
எனும் ஊரில் 9 ஆண்டுகளாக அருள்பாலித்து வரும் பகாவ் சீரடி பாபா வழிபாட்டு மையம். இன்னும் இரண்டு ஆண்டுகளில் சொந்த நிலத்தில் ஒரு பெரிய பாபா ஆலயத்தோடு செயல்பட தயாராக போகிறது .அதற்கான ஒப்பந்த கடிதத்தில் கையொப்பம் இடும் வைபவம் 28 Sept 2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்றது. அதை சமயம் மற்றும் சமூக சேவகர், மக்கள் கலைஞன் *கவிமாறன்* அவர்கள் தலைமையேற்று நடத்தி வைத்தார்.
சட்டரீதியான எல்லா வேலைகளும் முடிந்த பிறகு முறையாக பூமி பூஜை, அடிக்கல் நாட்டு விழா முடிந்து சீரடி பகவானின் ஆசியோடு இரண்டு ஆண்டுகளில் புதிய ஆலயம் கட்டப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் மகா கும்பாபிஷேகம் நடைபெறும்.. இந்து சமய சேவையோடு சமுதாய சேவையை முன்னிறுத்தி வழிபாட்டு மையத்தில் செயல்பாடுகள் நடைபெறும்..

News by Kavi Maran















