BUDI MADANI திட்டம்: RON95 பெட்ரோல் மானியத்திற்கு தகுதியுள்ளவர்களுக்கான அறிவிப்

 

கோலாலம்பூர்: செப்டம்பர் 25 ஆம் தேதி

மலேசிய நிதி அமைச்சு தொடங்கி வைத்த BUDI MADANI திட்டத்தின் கீழ், RON95 பெட்ரோல் மானியத்திற்கு தகுதியுள்ளவர்கள் தங்கள் தகுதியை காலை 9 மணி முதல் சரிபார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

 

அதிகாரப்பூர்வ இணையதளமான BUDI MADANI மூலம், பயனர்கள் தங்கள் தகுதியையும், மாதாந்திர மானியப் பயன்பாட்டின் இருப்பையும் சரிபார்க்கலாம்.

 

இரண்டாம் நிதியமைச்சர் டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் அளித்த தகவலின் அடிப்படையில், இதற்கு புதிய பதிவு எதுவும் தேவையில்லை. பயனர்கள் தங்கள் அடையாள அட்டையை பெட்ரோல் நிலையத்தில் உள்ள அட்டை வாசிக்கும் கருவியில் நுழைப்பதன் மூலம், மானியத்திற்கான தகுதியை உறுதிப்படுத்திய பின்னர் பணம் செலுத்தலாம்.

 

மொத்த மானியங்களை ரத்து செய்வதன் மூலம் அரசாங்கம் ஆண்டுக்கு RM2.5 பில்லியனில் இருந்து RM4 பில்லியன் வரை சேமிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இந்த சேமிப்பு, ரஹ்மா ரொக்க உதவி, சாரா அடிப்படை உதவி போன்ற இலக்கிடப்பட்ட உதவிகளுக்கு மீண்டும் ஒதுக்கப்படும். மேலும் தகவல்களுக்கு, பொதுமக்கள் 1300-88-9595 என்ற BUDI95 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *