மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம்

  1. மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிமை சந்தித்தார் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம

 

கோலாலம்பூர்: செப்டம்பர் 25 ஆம் தேதி

நாட்டின் பேரரசரான மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் அவர்களைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்தித்து பேசினார்.

 

இந்த தகவலை பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தனது அதிகார்ப்பூர்வ முகநூல் பக்கத்தில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூரில் உள்ள இஸ்தானா Bukit Tunku-வில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களைச் சந்தித்தார்.

 

இச்சந்திப்பின்போது, சுல்தான் இப்ராஹிம் அவர்களுக்குப் நாட்டில் நடைபெற்ற அண்மைய நடப்புகள், விவகாரங்கள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

 

குறிப்பாக, BUDI MADANI RON95 (BUDI95) மானியத் திட்டம் செயல்படுத்தப்படுவது மற்றும் அடுத்த மாதம் தலைநகரில் நடைபெறவிருக்கும் 47வது ஆசியான் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள் குறித்தும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

 

கடந்த திங்கட்கிழமை, பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்கள், BUDI95 திட்டத்தின் கீழ் மானியம் இலக்கு வைக்கப்பட்டதன் விளைவாக, RON95 பெட்ரோலின் விலை ஒரு லிட்டருக்கு RM2.05-ல் இருந்து RM1.99-ஆக குறைக்கப்பட்டதாக அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *