கோலாலம்பூர்,செப்டம்பர் 24 ஆம் தேதி – மலேசியாவின் முன்னணி உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு நிறுவனமான ஆஸ்ட்ரோ, செப்டம்பர் 21, 2025 அன்றுப் பெட்டாலிங் ஜெயாவில் உள்ள ருவாங் ராமா நிகழ்வு இடத்தில் நடைபெற்ற மறக்க முடியாத இசை இரவான அப்-க்ளோஸ் அண்ட் பெர்சனல் வித் ஸ்ரீனிவாஸ் மூலம் தனது விசுவாசமான வாடிக்கையாளர்களை மீண்டும் கௌரவித்தது.
ஆஸ்ட்ரோ ரிவாட்ஸ் மூலம் வெகுமதி பெற்ற வாடிக்கையாளர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் உட்படப் பிரபல இந்தியப் பின்னணிப் பாடகர் ஸ்ரீனிவாஸின் 300க்கும் மேற்பட்ட இரசிகர்கள், ஒரு பிரத்தியேக நேரடி நிகழ்ச்சியில் அவரது ஆத்மார்த்தமான இசையின் மாயாஜாலத்தை அனுபவித்தனர். ஸ்ரீனிவாஸ் தனது விருப்பமான வெற்றிப் பாடலான ஆப்பிள் பெண்ணே நீயாரோவுடன் நிகழ்ச்சியைத் தொடங்கியப்போது, இரசிகர்கள் உற்சாகத்தில் மூழ்கினர். இது ஒரு மறக்கமுடியாத இசைப் பயணத்திற்கானத் தொனியை அமைத்தது. மின்சார பூவே, முழுமதி, சொட்ட சொட்ட மற்றும் பலவற்றை உள்ளடக்கியத் தனது ஹிட் பாடல்களை ஸ்ரீனிவாஸ் பாடியப்போது இரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர், ஒவ்வொரு பாடல்களும் பாராட்டையும் தூண்டின. புகழ்பெற்ற இந்தியப் பின்னணிப் பாடகரான மறைந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் மூன்றுப் பிரியமானப் பாடல்களானக் கம்பன் ஏமாந்தான், மன்றம் வந்து மற்றும் தொட தொட அன்ப்ளக்டு ஆகியவற்றைப் பாடி அவருக்கு மனமார்ந்த அஞ்சலிச் செலுத்தியதோடு இரசிகர்களையும் நெகிழ்ச்சியடையச் செய்தார். மலேசிய தமிழ்ப் பாடல்களில் ஒன்றான கனா கனா பாடலைப், பிரபல உள்ளூர் கலைஞர்களானக் குமரேஷ் மற்றும் ஸ்ரீ வித்யாவுடன் இணைந்து ஸ்ரீனிவாஸ் பாடியபோது இரசிகர்கள் பிரமிப்பில் ஆழ்ந்தனர்.
மேலும் இந்தியப் பின்னணிப் பாடகருடனும் தனித்தும் ஸ்ரீனிவாஸின் பாடல்களான என் உயிரே, நெஞ்சம் ஒரு முறை நீ என்றது மற்றும் பூவுக்கெல்லாம் சிறகு போன்றவற்றைப் பாடி மேடையை உயிர்ப்பித்தப் புகழ்பெற்ற உள்ளூர் கலைஞர்களான அருளினி, ஹெமித்ரா, குமரேஷ் மற்றும் ஸ்ரீ வித்யா ஆகியோரின் அற்புதமானப் படைப்புகளால் இந்த நிகழ்ச்சி மேலும் மெருகூட்டப்பட்டது. ராகா அகிலாவால் தொகுத்து வழங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி, இரசிகர்களுக்கு ஓர் ஊடாடும் கேள்விப் பதில் அமர்வின் மூலம் பல்துறைப் பாடகருடன் நேரடியாக உரையாட ஓர் அரிய மற்றும் அர்த்தமுள்ள வாய்ப்பை வழங்கியது – இசை அனுபவத்தை இன்னும் மறக்கமுடியாததாகவும் போற்றத்தக்கதாகவும் இது மாற்றியது.
ஆஸ்ட்ரோவால் வழங்கப்பட்ட அப்-க்ளோஸ் அண்ட் பெர்சனல் வித் ஸ்ரீனிவாஸ் நிகழ்விற்கு ஈசா திரேடிங், தேஸ்த்தி புட் கேட்டரஸ், பேன்ஸி கஸ்த்தம் கேக்ஸ், சோயா பென்ஸ், வின்பிக்ஸ் போட்டோ பூத், டி’எவர்லாஸ்டிங் நாட், பெசிக் ஸ்ட்ரீம்ஸ், பிரிண்ட் அல்கமி மற்றும் அன்னலட்சுமி சைவ உணவகம் கோலாலம்பூர் ஆகியவை இணைந்து நிதியுதவி வழங்கி ஆதரித்தனர். கூடுதலாக, இந்த இசை நிகழ்ச்சியின் அதிகாரப்பூர்வ மின்னியல் கூட்டாளராக ஆஸ்ட்ரோ உலகமும் அதிகாரப்பூர்வ வானொலி கூட்டாளராக ராகாவும் திகழ்ந்தனர். பொங்கலை முன்னிட்டு அப்-க்ளோஸ் அண்ட் பெர்சனல் வித் ஸ்ரீனிவாஸ் நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பைக் கண்டு இரசியுங்கள். டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் அல்லது சூகா வழியாக நீங்கள் தவறவிட விரும்பாத ஓர் அற்புதமான இசை நிகழ்ச்சியுடன் பண்டிகைக் காலத்தைக் கொண்டாடுங்கள்.
ஆஸ்ட்ரோ ஒன் (Astro One) தொகுப்புகள் இப்போது ரிம49.99-இலிருந்துக் கிடைக்கும். எளிதான ஸ்ட்ரீமிங், முடிவற்றப் பொழுதுபோக்கு. ஆஸ்ட்ரோ பைபரின் 500எம்.பி.பி.எஸ்-ஐ மாதத்திற்கு ரிம139.99 கட்டணத்தில் பொழுதுபோக்குத் தொகுப்புடன் இணைத்து உங்கள் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மேம்படுத்துங்கள். ஆஸ்ட்ரோ ஒன் சந்தாதாரராக அல்லது மேம்படுத்த, www.astro.com.my அணுகவும் அல்லது 03 9543 3838 எண்ணுக்கு புலனம் செய்தி அனுப்பவம்.















