கோலாலம்பூர்::செப்டம்பர் 23. 2025
மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், திமோர்-லெஸ்டே குடியரசுக்கு அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டார்.

தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைப் பகிர்ந்துகொண்ட அவர், இந்தப் பயணம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவுகளை வலுப்படுத்தவும், 11-வது ஆசியான் உறுப்பு நாடாக இணைய உள்ள திமோர்-லெஸ்டேயின் தயார்நிலைக்கு ஆதரவு அளிக்கவும் முக்கியமானது எனக் குறிப்பிட்டார்.
“என் நண்பரான திமோர்-லெஸ்டே பிரதமர் கே ரலா ஷனனா குஸ்மாவோவின் அழைப்பின் பேரில் நான் இந்தப் பயணம் மேற்கொள்கிறேன்.
இந்த பயணத்தின் மூலம் திட்டமிடப்பட்டுள்ள அனைத்து நடவடிக்கைகளும் எளிமையாக நடந்தேறி, இரு நாடுகளுக்கும் பல நன்மைகளைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்” என்றும் அவர் பதிவிட்டுள்ளார்.
📰 செய்தி: வீர சின்னையன்















