
செப்டம்பர் 23. 2025
பெற்றோர், நண்பர்கள், காதல், குடும்பம்… மனிதனின் வாழ்வை வடிவமைக்கும் ரகசியங்களும் தியாகங்களும் எவ்வளவு ஆழமானவை? அவற்றை பாதுகாக்க நாம் எவ்வளவு தூரம் செல்லப்போகிறோம்? இத்தகைய கேள்விகளுக்கான உளவியல் பதிலைத் தேடும் படைப்பாக ‘PKP’ திரைக்கு வருகிறது.
இப்படத்தின் இயக்குநர் கார்த்திக் ஷமளன், “இது ஒரு சாதாரண த்ரில்லர் அல்ல; உண்மையும் மாயையும் இடையே உள்ள மெலிந்த கோட்டை மனம் எவ்வளவு எளிதில் குழப்புகிறது என்பதற்கான பிரதிபலிப்பு. மௌனம், நிழல்கள், மறைக்கப்பட்ட உணர்ச்சிகள் ஆகியவற்றின் மீது படைப்பு கட்டப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
5,000 சதுர அடி பரப்பளவுள்ள காடு செட் அமைக்கப்பட்டு, அனமார்பிக் (Anamorphic) முறையில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இது வெறும் காட்சி அழகுக்காக அல்ல, பார்வையாளர்களைச் சுற்றிய சூழல் சுவாசிப்பது, கவனிப்பது, நேரடியாக எதிர்கொள்வது போன்ற அனுபவத்தை வழங்குவதற்காக அமைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் மையக் கருத்து – மனிதர்கள்! அவர்களின் பயம், தியாகங்கள், மறைக்கப்பட்ட போராட்டங்கள், உயிர் பிழைத்தல், அடையாளம் மற்றும் உளவியல் ஆழங்கள் ஆகியவற்றைத் தொட்டு உணர்த்தும் கதை.
தயாரிப்பு: Shaibha Vision & SCFilm
எழுத்து, இயக்கம்: கார்த்திக் ஷமளன்
இசை: ஷமேஷன் மணி மாறன்
ஒளிப்பதிவு: திநேஷ் குமார் (TK)
மேக்-அப்: அபிராமி (Aby) & கிரி
ஸ்டண்ட்: சஹா
யுவராஜ் கிருஷ்ணன், தஷ்ரா அோந்தேரன்,
“கலை மாமன்” சி. எஸ். முருகன்,
மணியம், நொருல் ஹக் -வெரோனிகா தாமஸ் & தணேஸ்வரி ராஜேந்திரன்
📰 செய்தி: வீர சின்னையன்















