அரசாங்கம் சேதமடைந்த MyKad அட்டைகளை அக்டோபர் 7 வரை இலவசமாக மாற்றித் தருகிறது

அரசாங்கம் சேதமடைந்த MyKad அட்டைகளை அக்டோபர் 7 வரை இலவசமாக மாற்றித் தருகிறது

கோலாலம்பூர்:செப்டம்பர் 23. 2025
மலேசிய அரசாங்கம் சேதமடைந்த MyKad அட்டைகளை, குறிப்பாக சிப் படிக்க முடியாத அட்டைகளை, அக்டோபர் 7ஆம் தேதி வரை இலவசமாக மாற்றுவதற்கு RM714,660 ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த BUDI MADANI RON 95 (BUDI95) திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுடின் நசுஷன் இஸ்மாயில் இதுபற்றி கூறுகையில், பொதுவாக MyKad மாற்றுவதற்கு RM10 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும், ஆனால் அக்டோபர் 7 வரை அந்த கட்டணம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

BUDI95 திட்ட அறிவிப்புக்குப் பிறகு, சேதமடைந்த MyKad-ஐ மாற்றுவதற்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை மாதத்திற்கு 30,000-லிருந்து 48,000 ஆக அதிகரித்துள்ளது.

இதனால், பொதுமக்கள் எளிதாக MyKad-ஐ மாற்றிக்கொள்ள வசதியாக, தேசிய பதிவுத் துறை (JPN) அலுவலகங்கள் தேவைக்கேற்ப கூடுதல் நேரமும் செயல்பட தயாராக இருப்பதாக அமைச்சர் சைஃபுடின் உறுதி அளித்தார்.

BUDI95 போன்ற அரசின் திட்டங்கள் மக்களுக்கு எளிதாகக் கிடைக்க MyKad-ஐ பாதுகாப்பாக வைத்திருக்கும்படி அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

📰 செய்தி: வீர சின்னையன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *