திரு. பி.என். ரெட்டி அவர்கள் செப்டம்பர் 22 ஆம் தேதி மலேசிய எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முகமை (AKPS) தலைவர் தத்துக் ஸ்ரீ மொஹ்த் சுஹைலி மொஹ்த் ஜெய்ன் அவர்களை சந்தித்தார்.

இரு நாடுகளின் மக்களிடையே அதிகரித்து வரும் தொடர்புகள், சுற்றுலா பயணிகள் வருகை போன்றவற்றை கருத்தில் கொண்டு நடைபெற்ற இந்த சந்திப்பில், மக்களின் பாதுகாப்பான மற்றும் சீரான பயணம், வர்த்தகத்தின் தடையற்ற மற்றும் பாதுகாப்பான நடைமுறை ஆகியவை குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது.

மேலும், பரஸ்பர நலன்கள் சார்ந்த விஷயங்களில் இரு தரப்பும் நெருங்கிய ஒத்துழைப்பை வழங்க ஒப்புக்கொண்டனர்.















