பி.எஸ்.ஜி அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பலே BALLON D’OR விருது வென்றார்

பி.எஸ்.ஜி அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பலே BALLON D’OR விருது வென்றார்

பாரிஸ்:செப்டம்பர் 23. 2025
பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணியின் நட்சத்திர வீரர் உஸ்மான் டெம்பலே, தனது முதல் பாலன் டி’ஓர் (Ballon d’Or) விருதை வென்றார். பாரிஸில் நடந்த விருது வழங்கும் விழாவில், பிரெஞ்சு கிளப்பான PSG அணியின் வீரர்கள் முக்கிய விருதுகள் பலவற்றை வென்றனர்.

28 வயதான பிரான்ஸ் வீரரான டெம்பலே, கடந்த சீசனில் PSG அணிக்காக 53 போட்டிகளில் பங்கேற்று, 35 கோல்கள் அடித்து, 14 கோல்களுக்கு உதவினார். அவரது சிறப்பான ஆட்டத்தால் PSG அணி சாம்பியன்ஸ் லீக், லீக் மற்றும் பிரெஞ்சு கோப்பை என மூன்று பட்டங்களையும் வென்றது.

மேலும், லீக் 1 தொடரில் 21 கோல்களுடன் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் டெம்பலே முதலிடத்தில் இருந்தார். அதோடு, அவர் பிரான்ஸ் நாட்டின் சிறந்த வீரர் மற்றும் சாம்பியன்ஸ் லீக் தொடரின் சிறந்த வீரர் எனவும் தேர்வு செய்யப்பட்டார்.

கிளப் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் செல்சி அணிக்கு எதிராக தோல்வியடைந்தபோதும், PSG அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற டெம்பலே உதவினார்.

“செய்தி: வீர சின்னையன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *