கோலாலம்பூர்:செப்டம்பர் 23. 2025

RON95 பெட்ரோல் மானியத்தை இலக்கு வைத்து வழங்குவது, மானியக் கசிவுகளைத் தவிர்த்து, உதவி தேவைப்படும் மக்களுக்கு மட்டுமே கிடைப்பதை உறுதி செய்யும் என்று மலேசிய வரி கணக்காளர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் முகமது ஃபைருஸ் அப்துல் ரசாக் தெரிவித்தார்.
இத்திட்டம், நிதி மேலாண்மையுடன் செயல்படுத்தப்பட்டால், உண்மையிலேயே தேவைப்படுபவர்களுக்குப் பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
நீண்ட காலத்திற்கு ரொக்க மானியம் வழங்குவதே சிறந்தது என்றும், ஏனெனில் ஒவ்வொருவரின் தேவையும் வேறுபடும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஆனால், குறுகிய காலத்திற்கு தற்போதுள்ள மானிய முறை பொருத்தமானது என்றும், அதற்குள் அரசாங்கம் ஒரு நிலையான முறையை கண்டறியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக, 16 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியக் குடிமக்களும், ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களும் மாதத்திற்கு 300 லிட்டர் வரை RON95 பெட்ரோல் மானியம் பெறத் தகுதியுடையவர்கள் என அரசாங்கம் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
📰 செய்தி: வீர சின்னையன்














