மலேசிய மக்கள் BUDI95 திட்டத்தின் மூலம் ரோன் 95 பெட்ரோலுக்கு மாதத்திற்கு 300 லிட்டர் வரம்பைப் பெறுவார்கள் – பிரதமர் அன்வார்

மலேசிய மக்கள் BUDI95 திட்டத்தின் மூலம் ரோன் 95 பெட்ரோலுக்கு மாதத்திற்கு 300 லிட்டர் வரம்பைப் பெறுவார்கள் – பிரதமர் அன்வார்

கோலாலம்பூர்:செப்டம்பர் 22. 2025
மலேசிய மக்கள், BUDI95 திட்டத்தின் மூலம் RON95 பெட்ரோலுக்கு மாதத்திற்கு 300 லிட்டர் வரம்பை பெறுவார்கள் என்று டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.

இருப்பினும், இ-ஹெயிலிங் ஓட்டுநர்களுக்கு இந்த வரம்பு கிடையாது என்றும், அவர்கள் அதிக வரம்புக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் பிரதமர் கூறினார்.

“சராசரியாக மாதம் 150 லிட்டர், சிலருக்கு 200 லிட்டர், அதிகபட்சமாக 250 லிட்டர் என இருந்தாலும், யாரும் 300 லிட்டரை நெருங்குவதில்லை.

“இ-ஹெயிலிங் ஓட்டுநர்களுக்கு என்ன? அவர்களுக்கு இந்த வரம்பிலிருந்து விலக்கு அளிக்கிறோம், ஏனெனில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் இந்த வேலையைச் செய்கிறார்கள். எனவே அவர்களுக்கு (அதிகம்) தேவைப்பட்டால், நாங்கள் விலக்கு அளிப்போம்,” என்று அவர் கூறினார்.

பிரதமர் திணைக்கள ஊழியர்களுடன் நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹிட் ஹமிடி, பிரதமர் திணைக்கள அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவன சீர்திருத்தம்) டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட், மற்றும் பிரதமர் திணைக்கள அமைச்சர் (கூட்டாட்சிப் பிரதேசம்) டத்தோ ஸ்ரீ டாக்டர் சாலிஹா முஸ்தஃபா ஆகியோரும் உடன் இருந்தனர்.

முன்னதாக, வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் உள்நாட்டு மக்களுக்கான RON 95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM1.99 ஆகக் குறைக்கப்படும் என பிரதமர் அறிவித்திருந்தார்.

news by Veera Sinnayen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *