ஷா ஆலாம், செப்டம்பர் 21 –

மடானியின் அரவணைக்கும் கொள்கையால் வேறு வழியின்றி இந்தியர்கள் மீது பாஸ் கட்சிக்கு திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது; இதை ரமணன் கிண்டலாகச் சுட்டிக்காட்டினார்.”
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்னெடுத்து வரும் மடானி கொள்கை,

மலேசியர்களை ஒன்றிணைக்க சிறப்பாக செயல்பட்டு வருவதாக பி.கே.ஆர் உதவித் தலைவர் டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், மடானி கொள்கை அனைவரையும் அரவணைக்கும் விதமாக செயல்படுவதால், எதிர்க்கட்சியான பாஸ் கூட இந்தியர்களிடம் பாசத்தை வெளிப்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கிண்டலுடன் தெரிவித்தார்.
“இது மடானி கொள்கையின் வெற்றிக்கான சான்று. சமூக ஒற்றுமையை வளர்க்கும் முயற்சிகள், பாஸ் போன்ற கட்சிகளையும் வேறு வழியின்றி இந்தியர்களுக்கு நேசத்தை காட்டும் நிலைக்கு கொண்டுவந்துள்ளது,” என ரமணன் குறிப்பிட்டார்.
அவர் மேலும், மடானி கொள்கை நாட்டின் பல்வேறு இன, மத சமூகங்களை இணைக்கும் பாலமாக மாறி வருவதாகவும், இதனை எதிர்க்கட்சிகள் கூட மறுப்பதற்குத் தைரியம் காட்ட முடியாது என்றும் வலியுறுத்தினார்.















