புராணச் சிறுகதைகள் – குழந்தைகளின் வாயிலாக மேடையேறும் கதை விழா

ஷா ஆலாம், செப்டம்பர் 21 -புராணச் சிறுகதைகள் – குழந்தைகளின் வாயிலாக மேடையேறும் கதை விழா.பெட்டிகதை போல இனிமையும், புராணம் போல அர்த்தமும் கொண்ட சிறுகதைகள், குழந்தைகளின் குரலால் உயிர்ப்பெடுக்கின்றன.

Balsans Events & Productions மற்றும் Balsans Creative Kidz இணைந்து நடத்தும் “Chinna Katha of Puranas for Kids” நிகழ்ச்சி, வரும் 28ம் தேதி செப்டம்பர் 2025, ஜெயா ஷாப்பிங் சென்டர், மெயின் ஸ்டேஜில் நடைபெறும் தீபாவளி விழாவின் சிறப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றாக அமைகிறது.

மதியம் 2.30 மணி முதல் 3.30 மணி வரை நடைபெறும் இந்தக் கதை நேரத்தில், சிறு கதை சொல்லிகள் தங்களின் சிருஷ்டிசாலியான குரலும் கற்பனை சக்தியுமாக புராணக் கதைகளை புதுமையான முறையில் மக்களிடம் கொண்டு சேர்க்க உள்ளனர்.

இந்த நிகழ்வை ஆசிரியர் ரதிப்ரியா பால்சன் மற்றும் குழுவினர் சிறப்பாக வழிநடத்துகின்றனர். கலாசாரம், பாரம்பரியம் மற்றும் கதைக்களத்தின் மகத்துவத்தை குழந்தைகளின் பார்வையில் பகிரும் இந்த மந்திரமாய் ஒரு மணிநேர கதை நேரம், அனைவருக்கும் மறக்க முடியாத அனுபவத்தை தரும்.

கதை, கலாசாரம், குழந்தைகளின் கற்பனை – மூன்றும் இணையும் இந்த சிறப்பு தருணத்தை தவறவிடாதீர்கள்!

news by Naan Oru Malaysian

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *