பிங்காஸ் திட்டம் மேம்படுத்தப்படுகிறது – வருவாய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்

ஷா ஆலாம், செப்டம்பர் 20

பிங்காஸ் திட்டம் மேம்படுத்தப்படுகிறது – வருவாய் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம்


செலாங்கூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பிங்காஸ் (Bantuan Kehidupan Sejahtera Selangor – BINGKAS) திட்டம், அடுத்தாண்டு மேலும் மேம்படுத்தப்பட்டு, வருவாய் இழப்பு காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை குறிவைத்து உதவ உள்ளதாக மாநில வறுமை ஒழிப்பு நிறைவேற்று கவுன்சிலர் வி. பப்பராயுடு தெரிவித்துள்ளார்.

“இந்த திட்டத்தின் செயல்பாடுகளை நாங்கள் சமூக நலன் EXCO ஆன அன்ஃபால் சாஆரி உடன் இணைந்து முன்னெடுத்து வருகிறோம். இதன் மூலம் சமூக-பொருளாதார நிலையை உயர்த்துவது முக்கிய இலக்கு.

ஆனால் இம்முறை, பிங்காஸ் திட்டத்தின் சூத்திரம் (formula) மேம்படுத்தப்பட்டு, உண்மையில் உதவி தேவைப்படும் குடும்பங்களை நேரடியாக அடையச் செய்யப்படும். அதற்காக சில நிபந்தனைகள் தளர்த்தப்படவோ மாற்றப்படவோ செய்யப்படும். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் வறுமையிலிருந்து வெளியேற உதவியாகும்,” என அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “இதிலேயே அல்லாமல், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞர்களை மையப்படுத்திய சிறப்பு திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இது, அவர்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதார சிக்கல்களை சமாளிக்க பெரும் துணை புரியும்,” என்றார்.

Photo – mediaselangor

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *