சென்னை: செப்டம்பர் 19, 2025 பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமான செய்தி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுச் செய்தி வெளிவந்ததும், பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன், இன்று காலை ரோபோ சங்கர் அவர்களின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். குடும்பத்தாரிடம் ஆறுதல் கூறிய அவர், சங்கரின் மறைவு தமிழ் சினிமாவுக்கு ஒரு பெரிய இழப்பாகும் எனக் குறிப்பிட்டார்.
“தனித்துவமான நடிப்புத்திறமையால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் ரோபோ சங்கர். நகைச்சுவைக்கும், குணச்சித்திரக் கதாபாத்திரங்களுக்கும் உயிர் கொடுத்தவர். அவரின் இல்லாதிருப்பு நிரப்ப முடியாத வெற்றிடம்,” என்று கமல்ஹாசன் தெரிவித்தார்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்கள் இரங்கலைத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
News Rahul Ramesh Chennai















