நடிகர் ரோபோ சங்கர் மறைவு – திரையுலகம் துயரத்தில்
சென்னை:19 செப்டம்பர் 2025
தமிழ் திரைப்பட உலகில் தனது தனித்துவமான நகைச்சுவை நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்த நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக்குறைவால் காலமானார்.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் இன்று (19.09.2025) காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
2007-ஆம் ஆண்டு வெளியான தீபாவளி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான ரோபோ சங்கர், பின்னர் பல வெற்றி படங்களில் நடித்ததுடன், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பிரபலமடைந்தார். அவரின் இயல்பான நகைச்சுவை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.
ரோபோ சங்கரின் மறைவு திரைத்துறையிலும், ரசிகர்களிடையிலும் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
“அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.
ஓம் சாந்தி… ஓம் சாந்தி… ஓம் சாந்தி.”
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது –
Naan Oru Malaysian (NOM)















