மலேசியாவில் உலகத் தமிழர் பண்பாட்டு அமைப்பு (WTCO) தொடக்க விழா மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் (IMTC) பொன்விழா சிறப்பாக நடைபெற்றது.

மலேசியாவில் உலகத் தமிழர் பண்பாட்டு அமைப்பு (WTCO) தொடக்க விழா மற்றும் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் (IMTC) பொன்விழா சிறப்பாக நடைபெற்றது.

கிள்ளான், செப்டம்பர் 16, 2025 – மலேசியா தினத்தன்று, உலகத் தமிழர் பண்பாட்டு அமைப்பு (WTCO) மலேசியா கிளையின் தொடக்க விழாவும், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் (IMTC) பொன்விழாவும் செங்கா கன்வென்ஷன் ஹாலில், கிள்ளான் நகரில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. விழா மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற்றது.

இந்த சிறப்புப் நிகழ்வில், முக்கிய விருந்தினராக மலேசியாவின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மனிதவள அமைச்சரும், மலேசிய இந்திய காங்கிரஸ் துணைத்தலைவருமான YB Dato’ Seri Dr. M. Saravanan கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தமிழர் பண்பாட்டின் வளர்ச்சி மற்றும் உலகளாவிய ஒற்றுமை குறித்தும், இந்நிகழ்வின் முக்கியத்துவம் பற்றியும் அவர் உரையாற்றினார்.

 

இத்தொடக்க விழாவிலும் விருது வழங்கும் விழாவிலும் கலந்து கொண்ட மற்ற சிறப்பு விருந்தினர்கள்:

 

– Dr. L. Murugan, இந்தியாவின் தகவல் ஒளிபரப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம், இராஜ்யத்துறை அமைச்சர்

– Dr. Armoogum Parsuramen, மொரீஷியசின் முன்னாள் கல்வி மற்றும் கலாச்சார அமைச்சர்

– Dr. S. Subramaniam, முன்னாள் மனிதவள மற்றும் சுகாதார அமைச்சர், மலேசியா

– YB. Tuan V. Ganapathi Rao, கிளாங் பாராளுமன்ற உறுப்பினர்

– Datuk T. Mohan , முன்னாள் சனேட் உறுப்பினர்

– Professor Dr. Panch Ramalingam, இந்தியா, Pondicherry University

– Dr. A. Baheerathan, லண்டன்

– Dato’ Dr. M. Gopalakrishnan, WTCO தலைவர், மலேசியா

– கவிஞர் கவிரைமைந்தன், தமிழ்நாடு

News by Ammuchi

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *