மலேசியா தினக் கொண்டாட்டப் பேரணி – சிரம்பான் மாவட்ட கராத்தே சங்கம் சிறப்பான ஏற்பாடு
சிரம்பான் -16 செப்டம்பர் 25025
மலேசியா தினம் 2025 கொண்டாட்டத்தை முன்னிட்டு, சிரம்பான் மாவட்ட கராத்தே சங்கத்தின் தலைமையில் வண்ணமயமான பேரணி நிகழ்ச்சி மிகுந்த சிறப்புடன் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த கராத்தே சங்கங்கள் கலந்து கொண்டு தங்கள் ஒற்றுமையும் ஒத்துழைப்பையும் வெளிப்படுத்தின:
தம்பின் மாவட்ட கராத்தே சங்கம்
ரெம்பாவ் மாவட்ட கராத்தே சங்கம்
ஜெம்போல் மாவட்ட கராத்தே சங்கம்
ஜெலெபு மாவட்ட கராத்தே சங்கம்
சிரம்பான் மாவட்ட கராத்தே சங்கம்
பேரணிக்குப் பின், சிறப்பு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், நெகிரி செம்பிலான் மாநில அளவில் உள்ள உறுப்பினர் தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநில அளவில் கராத்தே விளையாட்டு மேம்பாடு ஒழுங்குமுறைப்படியும் தொடர்ச்சியாகவும் முன்னேற வேண்டும் என்ற நோக்கில் இந்தச் சந்திப்பு நடந்தது.
இந்த நிகழ்வுக்கு தனது அக்கறையையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வெளிப்படுத்திய மலேசிய இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சர் மதிப்பிற்குரிய யபி ஹன்னா யோவுக்கும், நெகிரி செம்பிலான் முதல்வருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர் உளமார்ந்த நன்றி தெரிவித்தனர்.
👉 “இந்நிகழ்வு கராத்தே விளையாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளமாகும். ஒற்றுமையும் ஒழுங்கும் காக்கப்பட்டால், இந்த விளையாட்டு மலேசிய இளைஞர்களுக்கு பெரும் பலனளிக்கும்” என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

















