பெரிம் வீரர்களுக்கு பாராட்டு – சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது

ஜோகூர், தேசா செமர்லாங் – பெரிம் அமைப்பின் வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. ஒவ்வொரு வீரருக்கும் பாராட்டுச் சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், SRJK(T) தேசா செமர்லாங் பள்ளி சிறப்பான சாதனையை எட்டியதற்காக பாராட்டப்பட்டது. பள்ளியின் வெற்றி குறித்து பெருமை கொள்வதாக நிகழ்ச்சியில் உரையாற்றியவர் தெரிவித்தார்.
அத்துடன், மாணவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும், குறிப்பாக பள்ளி தலைமை ஆசிரியருக்கும், அவர் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்.

“பெரிம் தலைவர் சார்பாக, அனைத்து ஆசிரியர்களுக்கும், பள்ளிக்கும், வீரர்களுக்கும் இதயம் கனிந்த நன்றி மற்றும் பாராட்டுகளை உரித்தாக்குகிறேன்,” என்று அவர் தனது உரையை நிறைவு செய்தார்.
YDP என் கண்ணியா















