பாமகவிலிருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கம்: இராமதாஸ் அறிவிப்பு

பாமகவிலிருந்து அன்புமணி ராமதாஸ் அதிரடியாக நீக்கம்: இராமதாஸ் அறிவிப்பு

சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் இராமதாஸ், தனது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த சில வாரங்களாக கட்சிக்குள் நிலவி வந்த உட்கட்சிப் பூசல் மற்றும் குடும்பப் பிளவுகளுக்கு இது முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

கட்சி விதிகளையும் கட்டுப்பாடுகளையும் மீறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எஸ். ராமதாஸ் தெரிவித்தார். அன்புமணியிடம் விளக்கம் கேட்டு இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பியும் அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என்றும், “மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி” என்றும் அவர் கூறினார்.
மேலும், எந்த ஒரு தொண்டனும் இதுபோல் நடந்துகொண்டதில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தெரிவித்த எஸ். ராமதாஸ், அன்புமணியை கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார்.

பாமகவின் வரலாற்றில் இது ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

NEWS BY NOM – VEERA SINNAYEN ( வீர சின்னையன் )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *