கோலாலம்பூர், 3 செப்டம்பர் 2025 – பெஸ்தா கொண்டாட்டம் 2025

கோலாலம்பூர், 3 செப்டம்பர் 2025 – பெஸ்தா கொண்டாட்டம் 2025, மலேசிய பண்பாட்டு விழாவின் (Festival Budaya Malaysia) இந்தியப் பண்பாட்டு பிரிவு, வரும் செப்டம்பர் 12 முதல் 16 வரை கோலாலம்பூர் தாமான் தாசிக் திதிவங்சாவில் சிறப்பாக நடைப்பெறவிருக்கிறது.
SRFA நிறுவனம், மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சகம் (MOTAC) ஆதரவுடன் நடத்தும் இந்த ஐந்து நாள் விழாவில், தமிழின் கலை, இசை, நடனம், ஆடை அலங்காரம், உணவு மற்றும் பாரம்பரியம் என 80-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
விழா இயக்குநர் செல்வி நளினி ரதகிரிஸ் கூறுகையில், “தொடக்கத்தில் ஆதரவாளர்களைப் பெறுவதில் சவால்கள் இருந்தாலும், எங்கள் நோக்கம் தெளிவாக இருந்தது. இந்தியப் பண்பாட்டு மரபை உயர்த்திக் காட்டுவதில் எங்கள் முயற்சிகள் நிறைவடைகின்றன,” என்றார்.
இந்த விழாவின் முக்கிய அம்சங்கள்:
பங்கேற்பாளர்களுக்கு பணப்பரிசுகள் மற்றும் MOTAC சான்றிதழ்கள் மலேசியா சாதனைப் புத்தகத்தில் (Malaysia Book of Records) இடம்பெறவிருக்கும் மிகப்பெரிய
கோலாட்டம் மற்றும் உருமி மேலம் நிகழ்ச்சிகள் தமிழ்ப்பண்பாட்டை வெளிப்படுத்தும் நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் மற்றும் உணவுக் கடைகள் அமைக்கப் படும்.
முக்கியமாக ஊடகங்களின் ஒத்துழைப்புடன், பெஸ்தா கொண்டாட்டம் 2025 மலேசியாவின் மிகப்பெரிய தமிழ்ப் பண்பாட்டு விழாவாக உருவெடுக்க உள்ளது. சமூகங்களை ஒன்றிணைக்கும், உற்சாகமும் ஒற்றுமையும் நிறைந்த கொண்டாட்டமாக இது அமையும்.
12 – 16 செப்டம்பர் 2025
தாமான் தாசிக் திதிவங்சா, கோலாலம்பூர்.
#பெஸ்தா கொண்டாட்டம் 2025 #தமிழ்ப்பண்பாட்டு
மலேசியா #மலேசியாபுக்ஆஃப்ரெக்கார்ட்ஸ் #நம்மோட கொண்டாட்டம் #Kondattam2025















