ஜோகூரில் லேசான நிலநடுக்கம் – சுனாமி அச்சமில்லை

ஜோகூர் மாநிலத்தில் (24 ஆகஸ்ட் 2025) இன்று  அதிகாலை 6.13 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மலேசிய வானிலைத் துறை தெரிவித்ததாவது, 4.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், ஜோகூர் மாநிலத்தின் செகாமட் நகரிலிருந்து மேற்கு திசையில் சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஜோகூர், நெகிரி செம்பிலான், மெலாக்கா மற்றும் தெற்கு பஹாங் மாநிலங்களில் பல இடங்களில் அதிர்வு உணரப்பட்டது.

மக்கள் பாதுகாப்பு தொடர்பில் கவலைப்பட வேண்டிய நிலை இல்லை எனவும், மலேசியாவுக்கு சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லையெனவும் வானிலைத் துறை உறுதி செய்துள்ளது.

மேலும், அதிர்வை உணர்ந்தவர்கள், துறை வழங்கியுள்ள சிறப்பு இணைப்பின் மூலம் கருத்துக்கணிப்பு படிவத்தை நிரப்புமாறு கோரப்பட்டுள்ளது.

மலேசிய வானிலைத் துறை, இந்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *